திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் மீட்பு
திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
தக்கலை,
திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
நிலம் மீட்பு
குமரி மாவட்டத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கையை குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் ஆளூர் பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நஞ்சை நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து 22 ஏக்கர் நஞ்சை நிலம் மீட்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆலயங்கள் நிலமீட்பு தனி தாசில்தார் சஜித் தலைமையில் திருச்செந்தூர் கோவில் பணியாளர் ஜெயந்திநாதன், நில அளவையர்கள் கண்ணன், விக்னேஷ், ராகேஷ் ஆகியோர் மீட்கபட்ட நிலத்தில் எல்கை கல் பதிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.