சாட்டையடி தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த 42 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

காவேரிப்பாக்கம் பகுதியில் சாட்டையடி தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 42 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தாசில்தார் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2022-11-18 18:09 GMT

காவேரிப்பாக்கம்,

காவேரிப்பாக்கம் பகுதியில் சாட்டையடி தொழிலாளர்கள் குடும்பத்தை சேர்ந்த 42 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க தாசில்தார் அறிவுறுத்தலின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாட்டையடி தொழிலாளர்கள்

காவேரிப்பாக்கம் ஒன்றியம் பனப்பாக்கம் பகுதியில் 46 குடும்பத்தினர் சாட்டையடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் உடலை சாட்டையால் அடித்துக்கொண்டு பொதுமக்களிடம் காசு வாங்கிபிழைத்து வருபவர்களாவர்.இவர்கள் அனைவரும் பனப்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

ஆனால் சொந்தமாக இடம் இல்லாததால் மழை மற்றும் வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அரசாங்கத்தால் இவர்களுக்கு சொந்தமாக இடம் ஒதுக்கீடு செய்து, கரிேவடு பகுதியில் வீடு கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பனப்பாக்கம் பகுதியில் இருந்து கரிவேடு ஊராட்சிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதனால் பனப்பாக்கம் பகுதியில் படித்து வந்த மாணவர்கள் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே நின்றுள்ளனர்.

இடைநின்ற மாணவர்கள்

இது குறித்து அறிந்த நெமிலி தாசில்தார் சுமதி பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கண்டறிய வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனையடுத்து காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் அப்பகுதியில் நேரில் சென்று பள்ளிக்கு செல்லாத மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடங்டனர்.

அப்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்கள் 25 பேரும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வந்த மாணவர்கள் 17 பேரும் என மொத்தம் 42 மாணவர்கள் பள்ளியில் இடைநின்றது தெரியவந்தது.

படிப்பை தொடர நடவடிக்கை

இதனையடுத்து அவர்களை அப்பகுதியில் உள்ள நிதியுதவி ஆரம்பப்பள்ளியில் சேர்க்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நெமிலி தாசில்தார் சுமதி நேற்று மாலை பள்ளிக்கு சென்று மாணவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், ரப்பர், கலர் பென்சில் உள்ளிட்ட தேவையான எழுது பொருட்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு இம்மாணவர்களை நாள்தோறும் கண்காணித்து படிப்பில் முன்னேற்றம் அடைய யெ்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.அப்போது வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திரசேகர், சத்யமூர்த்தி, உதவியாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்