முருகன் கோவிலில் மணி திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே முருகன் கோவிலில் மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2023-09-18 00:15 IST

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள செம்மார்கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்த 7 கிலோ எடையுள்ள பித்தளை மணியை யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது குறித்து கோவில் பூசாரி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்