பெல் தொழிற்சாலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

பெல் தொழிற்சாலை ஊழியர்கள் போனஸ் வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-01 11:54 GMT

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெல் நிறுவனத்தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஏ.பி. ஊழியர்கள் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது ஜாயிண்ட் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்டி போனஸ் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், போக்குவரத்து மற்றும் உணவுக்கு வழங்கப்பட்ட மானியங்களை ஏற்கெனவே வழங்கியது போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்