முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.

Update: 2022-07-21 20:09 GMT

வள்ளியூர்:

சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. கல்லூரி தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். முதலாம் ஆண்டு துறைத்தலைவர் ஜான் ஜெபஸ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் வள்ளியம்மாள்புரம் பங்குதந்தை ஜான்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளை ஆசீர்வதித்தார். கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். கடந்த கல்வி ஆண்டில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகளையும் மாணவர்களின் சாதனைகளையும் மெக்கானிக்கல் துறைத்தலைவர் ராம்கி எடுத்துரைத்தார். கல்லூரி துணை முதல்வர் விமலா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்