பழனிசெட்டிபட்டி பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-08-25 14:24 GMT

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 4 ஆண்டுகளாக மாற்றப்பட்டதற்கு சி.ஐ.டி,யூ.. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 4 ஆண்டாக மாற்றியதை கண்டித்து தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கி பேசினார். திண்டுக்கல் மண்டல மத்திய சங்க பொதுச்செயலாளர் ராமநாதன், துணைத்தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தி் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்