மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் மின்வாரிய அலுவலகம் முன்பு ெதாழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-09-13 16:46 GMT

தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக சுருக்குவதை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ரவி முருகன், மாவட்ட செயலாளர் பாண்டி, பொருளாளர் சென்றாய பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அதுபோல் தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், 3 ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள சரண்டர் விடுப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்