மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேனி அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-09-29 14:36 GMT

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தேனி அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி ஒன்றியத்தில் விதிமுறைகளுக்கு மாறாக வேறு மாவட்டங்களில் இருந்து பணி மாறுதல் செய்த இடைநிலை ஆசிரியர்களின் மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், தேனி ஒன்றியத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு பணி நிரவல் காரணமாக பணி இடமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜ்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்