கலெக்டர் அலுவலகம் முன்புஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-17 18:45 GMT

ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அரங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் மணி வரவேற்றார். போடி வட்டக்கிளை தலைவர் சுப்பிரமணியம், தேனி வட்டக்கிளை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில இணைச் செயலாளர் பாலுச்சாமி தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்த தேதி முதல் நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப நலநிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல், மருதம் மக்கள் கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் போலி சாதிச்சான்றிதழ் மூலம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கூறியும், அந்த சான்றிதழை ரத்து செய்யக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்