கலெக்டர் அலுவலகம் முன்புசெவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-10 18:45 GMT

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். நிர்வாகிகள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு தகவல் பதிவு பணியாளர் நியமிக்க வேண்டும். பழுதடைந்து தங்குவதற்கு தகுதியில்லாத துணை மைய கட்டிடத்துக்கு வாடகை பிடித்தம் செய்யக்கூடாது. 5 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்