கலெக்டர் அலுவலகம் முன்புஇந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-01-07 18:45 GMT

இந்து எழுச்சி முன்னணி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னை வில்லிவாக்கத்தில் நடந்த கிராம கோவில்கள் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழாவில் பூசாரிகள் காவி உடை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்ட அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கவர்னருக்கு அனுப்புவதற்காக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகனிடம் அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில், சென்னை வில்லிவாக்கத்தில் 2,500 கிராம கோவில்களில் திருப்பணி செய்ய நிதி வழங்கும் விழாவில் அரசு நிதியை பெற வந்த பூசாரிகள் காவி வேட்டி, காவி துண்டு அணிந்து வரக்கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த செயல் இந்து பூசாரிகளிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் இந்துக்களின் மத அடையாளங்களில் தமிழக அரசு தலையிடுவதை நிறுத்திக் கொள்ள கவர்னர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்