'எலைட்' மதுக்கடை சுவரில் துளையிட்டு பீர்பாட்டில்கள் திருட்டு

‘எலைட்’ மதுக்கடை சுவரில் துளையிட்டு பீர்பாட்டில்கள் திருட்டு: கண்காணிப்பு கேமரா பதிவையும் எடுத்துச்சென்று மர்மநபர்கள் கைவரிசை.

Update: 2022-10-30 22:25 GMT

வேலூர்,

வேலூர் காட்பாடி காங்கேயநல்லூரில் அரசு உயர்ரக மதுபான விற்பனை கடை (எலைட்) உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளர்களாக புகழேந்தி, சங்கர் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புகழேந்தி டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை புகழேந்தியின் செல்போனில் பார்க்கும் வகையில் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை கண்காணிப்பு கேமராவின் இணைப்பு செயல்படவில்லை. இதையடுத்து சிறிது நேரத்தில் சங்கருடன் சென்று புகழேந்தி டாஸ்மாக் கடையை திறந்து பார்த்தார். அங்கு கடையின் பின்பக்க சுவரில் துளையிடப்பட்டிருந்தது. இதன் வழியாக கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் 10-க்கும் மேற்பட்ட பீர்பாட்டில்களை திருடிச் சென்றது தெரிய வந்தது.

மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவான ஹார்டிஸ்க்கையும் எடுத்துச்சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்