பெலத்தூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த கரடி-பொதுமக்கள் அச்சம்

Update: 2022-11-04 18:45 GMT

ஓசூர், நவ.5-

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் தாலுகா ஜிகினியில், நந்தனவனா லே-அவுட் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி வீடுகளையொட்டி சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. குடியிருப்புக்குள் கரடி புகுந்துள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கரடியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அந்த கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கரடி புதர்களுக்குள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்