தேனீ வளர்ப்பு கருத்தரங்கு
வாகைகுளத்தில் தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடந்தது.
சாயர்புரம்:
தூத்துக்குடி வட்டார மாநில விரிவாக்க திட்டங்களின் சீரமைப்பு திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான விவசாயிகள் சுற்றுலாவாக வாகைகுளம் வேளாண் அறிவியல் மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தேனீவளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தேனீ வளர்ப்பு குறித்து பூச்சிகள் துறை தொழில் நுட்ப வல்லுனர் முத்துக்குமார், சுமதி, துணை வேளாண்மை அலுவலர் ஆனந்தன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுடலைமணி ஆகியோர் விரிவாக எடுத்து கூறினா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழில் நுட்ப மேலாளர்கள் முத்துகிருஷ்ணன், பகவதி ஆகியோர் செய்திருந்தனர்.