தேனீ வளர்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடந்தது.

Update: 2023-09-14 18:45 GMT

நீடாமங்கலம்:

தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நீடாமங்கலத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு குறித்து ஏழு நாள் பயிற்சி தொடங்கியது. இந்த பயிற்சியை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்து தேனீ வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார். உழவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேனீ வளர்ப்பின் பங்கு குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்துதலில் தேனீக்களின் பங்கு குறித்தும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலெட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் கா இளவரசன் ஆகியோர் பேசினர்.

இதனை தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியார் ராமசாமி, தொழில்நுட்ப வல்லுனர்(பயிர் பாதுகாப்பு) ராஜேஷ் ஆகியோர் தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் பேசினர். பயிற்சியில் தேனீவளர்ப்பு கருத்துக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்