பீடித்தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

பாவூர்சத்திரம் அருகே பீடித்தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2023-10-10 19:00 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே முத்துமாலைபுரத்தில் தனியார் பீடி கடை உள்ளது. இங்கு அய்யனூர், திருமலாபுரம், சிவநாடனூர், ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் பீடி சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு தரமற்ற பீடி இலை தூள்கள் கொடுத்து, போனஸ் மற்றும் விடுமுறை, உயர்த்தப்பட்ட சம்பளம் ஆகியவற்றை முறையாக கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று சில்லரைபுரவு கிராம ஊராட்சி தலைவர் குமார் தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். இதனை அறிந்த நிர்வாகத்தினர் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சில நாட்களில் சம்பளம் மற்றும் போனஸ் கொடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்