பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையத்தில் பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பீடி கம்பெனி அலுவலக தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 15-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் விடுமுறை அளிக்க வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு ஆயிரம் பீடி சுற்றுவதற்கு தரமான இலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேலப்பாளையம் சந்தை முக்கில் சி.ஐ.டி.யு. பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கிளைத்தலைவர் குழந்தைவேலு தலைமை தாங்கினார், சங்க மாவட்ட செயலாளர் கே.மாரிச்செல்வம், மாவட்ட பொருளாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் சூசை அருள் சேவியர், மாவட்ட துணைச்செயலாளர் இசக்கி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்க மாவட்ட தலைவர் சரவணபெருமாள் நிறைவுரையாற்றினார்.