குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழில் அதிபர் தற்கொலை

குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-08-26 21:59 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள சின்னபிடாரியூர் சரவணபட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 38). இவர் சென்னிமலை பெரியார் நகரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வந்தார். கதிரேசனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்துவிட்டு மனைவி ரமாதேவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தன்று கதிரேசன் தன்னுடைய பின்னலாடை நிறுவனத்திற்கு மது போதையில் வந்திருக்கிறார். அதைப்பார்த்த மனைவி ரமாதேவி கணவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கதிரேசன் வீட்டுக்குள் சென்று படுக்கையறையில் உள்பக்கமாக தாழிட்டு கொண்டு, தொட்டில் கட்டும் கொக்கியில் ஒயர் மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரமாதேவி சென்னிமலை போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதிரேசனின் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்