திருமண ஏற்பாடு பிடிக்காததால்பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை

போடியில் திருமண ஏற்பாடு பிடிக்காததால் பட்டதாரி பெண் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-29 18:45 GMT

இளநிலை பட்டதாரி

தேனி மாவட்டம் போடி சடையாண்டி நகர் புத்தர் பள்ளி மேற்கு தெருவை சேர்ந்தவர் முருகன். துணி வியாபாரி. இவரது மகள் அர்ச்சனா (வயது 23). இளநிலை பட்டதாரி. தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், தற்ேபாது தனது தந்தையின் வியாபாரத்தில் வரவு, செலவு கணக்கு பார்த்து கொண்டு இருந்தார். நேற்று முன்தினம் இவர், ஏ.டி.எம்.மிற்கு சென்று பணம் எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்தார்.

பின்னர் அந்த பணத்தை அவர் தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு மாடிக்கு செல்வதாக தனது அக்காளிடம் கூறிவிட்டு சென்றார். இரவு 9 மணி ஆகியும் சாப்பிடுவதற்கு கூட அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்காள் மாடிக்கு சென்று பார்த்தார்.

தீயில் கருகி சாவு

அப்ேபாது அங்குள்ள கழிப்பறையில் அர்ச்சனா உடல் முழுவதும் தீ எரிந்த நிலையில் இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்து கொண்டு கீழே ஓடி வந்து பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் ஓடிச்சென்று பார்ப்பதற்குள் அர்ச்சனா தீயில் கருகி இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு கிடந்த அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருமண ஏற்பாடு

அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர். இந்த திருமண ஏற்பாடு பிடிக்காததால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஏற்பாடு பிடிக்காததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்