நெல்லையில் கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடி - கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்
புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கிராம மக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கோட்டத்திற்கு உட்பட்ட புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்த கரடி ஒன்று, கிராம மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. இதனை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில், கரடியை பிடிப்பதற்காக புலவன் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்ட நிலையில், அந்த கூண்டிற்குள் கரடி சிக்கியது.
இதைத் தொடர்ந்து வனச்சரக அலுவலர் தலைமையிலான வன பணியாளர்கள், கூண்டில் சிக்கிய கரடியை காட்டு பகுதியில் கொண்டு விடும் பணிகளை மேற்கொண்டனர்.