கிராமங்களில் கரடி நடமாட்டம்

கிராமங்களில் கரடி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2023-06-23 19:45 GMT

குன்னூர்

குன்னூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் மேல் பாரதி நகர், பாரதி நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் சமீப நாட்களாக கரடி நடமாடி வந்தது. கடந்த வாரம் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து, பொருட்களை சேதப்படுத்தியது.

இதுகுறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் கரடி நடமாட்டம் கேமராவில் பதிவானால் தான் கூண்டு வைத்து பிடிக்க முடியும் என்று கூறியதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் கரடி தினமும் இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு 7 மணிக்குள் தங்கள் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். பல்வேறு பணிகளுக்காக வெளியே சென்று வருபவர்கள் கரடி நடமாட்டத்தால் அச்சத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. எனவே, அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பு வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்