செஞ்சியில் கரடி நடமாட்டம்பொதுமக்கள் பீதி

செஞ்சி பகுதியில் கரடி நடமாட்டம் காரணமாக, பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2023-03-15 18:45 GMT

செஞ்சி, 

கரடி நடமாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த கோனைப்புதூர், சோம சமுத்திரம், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று சுற்றித்திரிந்து வந்ததோடு, ஆடு, மாடுகளையும் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோனைபுதூர் கிராமத்தில் வயல்வெளியில் அந்த கரடி சுற்றியது. இதை பார்த்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வன சரகர் வெங்கடேசன் தலைமையிலான வனத்துறையினர் மேற்படி கிராமத்துக்கு சென்று கரடி எங்குள்ளது என்று தேடி வருகின்றனர். மேலும், அதை பிடிக்க பல இடங்களில் கூண்டுகளையும் வைத்துள்ளனர்.

மக்கள் பீதி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைகள் சார்ந்த பகுதியாகும். இங்குள்ள மலை குன்றுகளில் இருந்து கரடி கிராமத்துக்குள் புகுந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு மேலாக கரடி பல்வேறு கிராமங்களில் சுற்றித்திரிந்து வருவது செஞ்சி பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்