ஏழைக்குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்கும் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி

ஏழைக்குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை உருவாக்கும் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி என்று அதன் நிறுவனர் பிரபலா ஜெ.ராஸ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

Update: 2023-05-09 18:45 GMT

விழுப்புரம்:

பவ்டா கலை, அறிவியல் கல்லூரி நிறுவனர் பிரபலா ஜெ.ராஸ் கூறியிருப்பதாவது:-

மயிலம் அருகே கொல்லியங்குணத்தில் உள்ள பவ்டா கலை, அறிவியல் கல்லூரி அடித்தட்டு மக்களின் மாணவர்களுக்கு குறைந்த கல்வி கட்டணம் பெற்று தரமான கல்வியை கொடுக்கிறோம். மேலும் மதிய உணவுடன், கிராமங்களில் இருந்து கல்லூரிக்கு வர பஸ் வசதி ஏற்படுத்தி ஒரு சேவையாக கல்வியை அளித்து வருகிறது.

பவ்டா சுய உதவிக்குழு மற்றும் மாட்டுவண்டி தொழிலாளர் உறுப்பினர்களின் குழந்தைகள், விதவைகளின் பிள்ளைகள் மற்றும் ஆதரவற்ற மாணவர்கள், 75 சதவீதம் மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு துறையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் போன்றவர்களுக்கு இக்கல்லூரியில் கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.

கட்டண சலுகை

இதே கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து முதுகலையில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளித்தும் வருகிறது. அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும், தனி தொழில் தொடங்குவதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த கல்லூரியில் சிறந்த ஆய்வகம், ஆங்கில திறமையை அதிகரிப்பதற்கு தனி ஆய்வகம், சிறந்த நூலகம், தியான மண்டபம், விளையாட்டு மைதானம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம் போன்ற அம்சங்கள் உள்ளன. ஏழைக்குடும்பங்களில் முதல் பட்டதாரிகளை பவ்டா கலை, அறிவியல் கல்லூரி உருவாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்