நெல்லையப்பர் கோவிலில் பவுத்திர உற்சவ விழா

நெல்லையப்பர் கோவிலில் பவுத்திர உற்சவ விழா நடந்தது.

Update: 2023-08-29 20:36 GMT

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் சிறு, சிறு தவறு நடந்து இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய ஆண்டுதோறும் பவுத்திர உற்சவம் விழா நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி யாகம் வளர்க்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

பின்னர் உலக நன்மைக்காக உற்சவ மூர்த்திக்கு பூணூல் மாற்றப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்டிகேசுவரர் சப்பர ரதத்திலும் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்