வி.ஐ.டி."கிராவிடாஸ்" அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர்

வி.ஐ.டி.“கிராவிடாஸ்” அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-10-01 19:01 GMT

வேலூர்

வி.ஐ.டி."கிராவிடாஸ்" அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் ஏற்படுத்தப்பட்டது.

வேலூர் வி.ஐ.டி.யில் ''கிராவிடாஸ்'' என்கிற அறிவுசார் தொழில்நுட்ப திருவிழா கடந்த 30-ந்் தேதி தொடங்கி இன்று (ஞாயிறு) நிறைவடைகிறது. இந்த ''கிராவிடாஸ்'' அறிவுசார் திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், வி.ஐ.டி.மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 13 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

இதன் 2-ம் நாளில் ரோபோக்களின் எந்திர போர் நடைபெற்றது அதே போல் வானத்தில் டிரோன்களின் போட்டி அணிவகுப்பு நிகழ்வும் நடைபெற்றது.

ரோபோ போர் தொழில்நுட்பம் குறித்து வி.ஐ.டி.துணைத்தலைவர் ஜி.வி.செல்வத்திடம் மாணவர்கள் விளக்கினர். ''கிராவிடாஸ்'' திருவிழாவில் மாணவர்களின் 150 படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் வி.ஐ.டி.துணைவேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் டி.ஜெயபாரதி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்