கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் மின்கல தெளிப்பான்

Update: 2023-03-31 18:45 GMT

பரமத்திவேலூர்:

கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கபிலர்மலை வட்டார வேளாண்மை துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆனங்கூர், வடகரையாத்தூர், சிறுநல்லிக்கோவில், சுள்ளிபாளையம், குப்பிரிக்காபாளையம் ஆகிய கிராமங்களுக்கு மானிய விலையில் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி ஸ்பிரேயர் (மின்கல தெளிப்பான்) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 25 பேட்டரி ஸ்பிரேயர்கள் இருப்பில் உள்ளது. எனவே தேவைப்படும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ரேசன் கார்டு நகல், சிட்டா, போட்டோ ஆகியவற்றை கபிலர்மலை வேளாண்மை துறை அலுவலகத்தில் சமர்பித்து பேட்டரி ஸ்பிரேயர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்