அழகர்மலை மரங்களில் தொங்கும் வவ்வால்கள் -சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
அழகர்மலை மரங்களில் தொங்கும் வவ்வால்களை புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர்
அழகர்கோவில்
மதுரையை அடுத்த அழகர்கோவில் இயற்கையான சூழ்நிைலயில் அமைந்து உள்ளது.
விடுமுறை நாள் என்றாலே மதுரை உள்பட வெளி மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்கள் பஸ்களிலும், வேன்களிலும், கார்களிலும் வந்து குவிந்து விடுவார்கள். இங்கு குரங்கு கூட்டங்களும், முயல், காட்டெருமைகள், குயில், பச்சை கிளி, குருவிகள் உள்ளிட்ட பல்வேறு பறவை இனங்களை காணமுடியும்.அத்துடன் அழகர் மலை உச்சியில் நூபுர கங்கை தீர்த்த தொட்டி அருகில் நீண்ட நெடுமலை மரங்கள் உள்ளன.
இந்த மரக்கிளைகளில் நூற்றுக்கணக்கான பழம் தின்னும் வவ்வால் கூட்டம் தலைகீழாக கீச்சொலி சத்தத்துடன் தொங்கி கொண்டு இருக்கின்றன.
கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் இந்த வவ்வால்களை போட்டோ எடுத்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.