வெள்ளம் குறைந்ததால் குளிக்க அனுமதி: குற்றாலம் அருவியில் அய்யப்ப பக்தர்கள் நீராடினர்

குற்றாலம் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக நீராடினர்.

Update: 2022-12-04 18:45 GMT

குற்றாலம் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அய்யப்ப பக்தர்கள் ஆனந்தமாக நீராடினர்.

வெள்ளப்பெருக்கு குறைந்தது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் திடீெரன வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர்.

குளித்து மகிழ்ந்தனர்

நேற்று விடுமுறை நாள் என்பதால் அருவியில் அதிகமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அருவியில் ஆனந்தமாக நீராடி சென்றனர்.

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் அங்கு நேற்றும் தடை நீடித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்