பத்தமடை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பத்தமடை முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சேரன்மாதேவி:
பத்தமடை அன்னை மணியம்மை தெருவில் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக பூஜை, நவக்கிரக ஹோமம் மற்றும் யாகசாலை பூைஜகளை தொடர்ந்து விமான கும்பாபிஷேகம் மற்றும் அம்மனுக்கு கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.