கூடைப்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம்
அம்பையில் கூடைப்பந்தாட்ட சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
அம்பை:
அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியில் அம்பை தீர்த்தபதி கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் காலை, மாலை என இருவேளை சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். பயிற்சியில் மாணவர்களை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன், நகரசபை துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், கவுன்சிலர் ராமசாமி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து ஊக்கப்படுத்தினர்.