சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் ஆறாக பாயும் கழிவுநீர்

சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் ஆறாக பாயும் கழிவுநீர்

Update: 2023-03-30 10:16 GMT

அனுப்பர்பாளையம்

அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணியாம்பூண்டி ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் அங்கு ஒருசில பகுதிகள் தவிர பெரும்பான்மையான பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் இடத்தில் உள்ள கால்வாயில் தேக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தனியார் அந்த கால்வாயை மூடிவிட்டார்கள். இதனால் அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஆறாக பாய்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சாலையில் அதிக அளவில் தேங்கி உள்ள கழிவுநீரில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கணியாம்பூண்டி ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்