ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்

ஆற்றங்கரையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்

Update: 2023-03-10 18:45 GMT

நெகமம்

நெகமத்தை அடுத்த தேவணாம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து செட்டியக்காபாளையம் செல்லும் சாலையில் உள்ள வளைவில், சிற்றாறு ஒன்று உள்ளது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

ஆனால் சாலையோரத்தில் தடுப்புச்சுவரோ அல்லது இரும்பு தடுப்புகளோ இல்லை. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலையோர புற்கள், செடி, கொடிகளை மேயும் கால்நடைகள் ஆற்றுக்குள் தவறி விழும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, தேவணாம்பாளையம்-செட்டியக்காபாளையம் சாலையில் உள்ள வளைவில் ஆற்றங்கரையில் போதிய தெருவிளக்கு வசதி இல்லாததால் போதிய வெளிச்சம் கிடையாது. இதனால் அந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தடுப்புகள் இல்லாததால், இரவில் வரும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும்போது, ஆற்றுக்குள் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே தடுப்பு அமைப்பதோடு போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்