பெரிய ஏரி மதகுகளில் தடுப்பு பலகை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும்

சோளிங்கர் பெரிய ஏரி மதகுகளில் தடுப்பு பலகை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 16:11 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பெரிய ஏரி 468 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி தற்போது மழை காரணமாக நிரம்பி கடை வாசல் சென்றது. 3 ஆடி உயரமுள்ள வெட்டும் மதகுகள் வழியாக உபநீர் வெளியேறி வருகிறது. பொதுப்பணிதுறை சார்பில் கார்த்திகை மாதத்தில் உபரி நீர் வெளியேறாதவாறு வெட்டு மதகுகளில் தடுப்பு அமைத்து தண்ணீரை வெயில் காலங்களில் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்காகவும் சேமிப்பது வழக்கம்.

ஆனால் தற்போது சோளிங்கர் பெரிய ஏரியின் 9 வெட்டுமதகுகளிலும் தண்ணீர் வீணாக வெளியேறிகிறது. தண்ணீரை சேமிக்கும் விதமாக கடை வாசல் பகுதியில் உள்ள வெட்டு மதகுகளில் தடுப்பு பலகை அமைத்து தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்