சட்டவிரோதமாக மது விற்ற பாருக்கு 'சீல்'

சட்டவிரோதமாக மது விற்ற பாருக்கு ‘சீல்’

Update: 2022-08-15 16:33 GMT

பொள்ளாச்சி

சுதந்திர தினத்தையொட்டி இன்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே கோட்டூரில் இருந்து ஆழியாறு செல்லும் ரோட்டில் உள்ள மதுபான பாரில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சித்தேஸ்வரன் அந்த மதுபாருக்கு சென்று சோதனை செய்த போது சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதற்கிடையில் பார் ஊழியர் கிராம நிர்வாக அலுவலரை தகாத வார்த்தையால் பேசி அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போனை பறித்துக் கொண்டு பாரை விட்டு வெளியே தள்ளியதாக தெரிகிறது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் ஆனைமலை தாசில்தார் பானுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் வருவாய் துறையினர் அந்த பாருக்கு சீல் வைத்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சித்தேஸ்வரன் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த டேமின் லியோ (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்