அனுமதியின்றி இயங்கிய பாருக்கு 'சீல்'

ஆம்பூர் அருகே அனுமதியின்றி இயங்கிய பாருக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

Update: 2023-05-24 17:55 GMT

ஆம்பூர் பைபாஸ் பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை பின்புறம் அனுமதியின்றி பார் நடப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலால் உதவி ஆணையர் பானுமதி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலிசார் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது உரிய அனுமதியின்றி பார் இயங்கி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் பாருக்கு 'சீல்' வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்