விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

Update: 2023-06-08 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 53 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 6 கிராம் தங்கம், 200 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் செயல் அலுவலர் மாலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்