கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்புரூ.6½ லட்சம் காணிக்கை வசூல்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில் ரூ.6½ லட்சம் காணிக்கை வசூலானது.

Update: 2023-01-12 19:26 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடலூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மேலும் கோவிலில் உள்ள உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், சரக ஆய்வர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நேற்று பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் 30 பேர் ஈடுபட்டனர்.

இதில் பக்தர்கள் 6 லட்சத்து 51 ஆயிரத்து 932 ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 5 கிராம் தங்க நகையும், 83 கிராம் வெள்ளி நகையும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்