நந்தி பெருமானுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

நந்தி பெருமானுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

Update: 2023-01-16 19:00 GMT

பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீபிரம்மபுரீசுவரர் கோவிலில் நேற்று காலை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, முறுக்கு மற்றும் ரூபாய் நோட்டுகள் கோர்த்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்திவைத்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கோவில் திருப்பணி குழு பொறுப்பாளர் மெடிக்கல் ராமலிங்கம் தலைமை தாங்கினார். விழா ஏற்பாடுகளை நகரத்தார் சமூக பெருமக்கள் செய்திருந்தனர். இதில் தின வழிபாட்டு குழுவினர், வார வழிபாட்டு சங்கத்தினர், பிரதோஷ வழிபாட்டு குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்