வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் தாட்கோ கடன், மகளிர் குழு கடன், பட்டுப்புழு வளர்ப்பு கடன், கைத்தறிக்கடன், வேளாண்மை விற்பனைத்துறை, வேளாண்மை துறை சார்பில் வழங்கப்படும் கிசான் அட்டை, மாவட்ட தொழில் மையத்தில் செயல்படும் திட்டங்கள் உள்ளிட்ட மத்திய அரசு மற்றும் மாநில அரசால் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் மானியத் திட்டங்கள் பயனாளிகளுக்கு விரைந்து கிடைத்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் சையித்சுலைமான், மண்டல இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) சோமசுந்தரம், வேளாண்மை இணை இயக்குனர் அரகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சிலம்பரசன், தாட்கோ மேலாளர் ஏழுமலை உள்பட பல்வேறு துறை உயர் அலுவலர்கள், செயல் அலுவலர்கள், இளம் வல்லுநர்கள் மற்றும் வட்டார அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.