வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-20 20:51 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன்பு வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத் திட்டத்தில் மாறுதல், புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டம், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் சக்கரவர்த்தி, பாரத ஸ்டேட் வங்கி சங்க உதவி பொதுச் செயலாளர் விஜயராஜன், இந்திய வங்கி சங்க செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்