வைத்தியநாத சுவாமி கோவிலில் மீண்டும் உண்டியல் பணம் திருட்டு

வைத்தியநாத சுவாமி கோவிலில் மீண்டும் உண்டியல் பணம் திருட்டுபோனது.

Update: 2022-06-13 19:57 GMT

கீழப்பழுவூர்:

2-வது முறையாக திருட்டு

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற வைத்தியநாதசுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் கடந்த 6-ந் தேதி உண்டியலை உடைத்து பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் இந்த கோவிலின் உண்டியல் உடைக்கபட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் மணிவேலன் கூறுகையில், கோவிலில் 4 உண்டியல்கள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடந்துள்ளதாகவும், திருட்டு போன பணத்தின் மதிப்பு தெரியவில்லை என்றும் கூறினார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலை சுற்றி கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு உள்ள நிலையில், நடந்த இந்த திருட்டு சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்