சிதம்பரம்தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு :ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 731 காணிக்கை வசூலானது
சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறக்கப்ட்டது. இதில் ரூ.2 லட்சத்து 89 ஆயிரத்து 731 காணிக்கை வசூலானது.
சிதம்பரம்,
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள 6 உண்டியல்கள் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்க பெருமாள் தலைமையில், கோவில் செயல் அலுவலர் ச. சரண்யா, காட்டுமன்னார்கோவில் செயல் அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து, உண்டியலில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதில் 2 லட்சத்து 89 ஆயிரத்து 731 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
மேலும் உண்டியலில் 11 கிராம் தங்கம், 12.500கிராம் வெள்ளி மற்றும் சிங்கப்பூர் டாலர் 1, ஆகியவையும் இருந்தது தெரியவந்தது.