பொங்கல் பண்டிகை: வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை

மொபல் வங்கி சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-01-13 01:30 IST

சென்னை,

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜனவரி 15ம் தேதி பொங்கல் திருநாள், ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பெரிய நகரங்களில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

இந்தநிலையில்,தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13 ம் தேதி 2 ம் சனிக்கிழமை, ஜனவரி 14, பொதுவிடுமுறை, ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபல் வங்கி சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வங்கிகளுக்கு பல மாநிலங்களில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்களது பணத்தேவைகளை முறையாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்