வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-25 19:54 GMT

நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வருகிற 30, 31-ந்தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலை மாநிலம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மெக்டொனால்டு சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.பி.ஐ. ஊழியர் சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் சுப்பிரமணியன், கணபதி சுப்பிரமணியன், ஹேமந்த்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் செந்தமிழ்செல்வன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்