வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து; 4 பேர் கைது
மதுரையில் வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் வங்கி ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கத்திக்குத்து
மதுரை மகபூப்பாளையம் அன்சாரி நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் லியோன் (வயது 40). வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் மகபூப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது குடிபோதையில் இருந்த 4 பேர் அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்தனர். அதை ஆரோக்கிய ஜோசப் லியோன் தட்டி கேட்டார். ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பினர்.
4 பேர் கைது
இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் எல்லீஸ் நகர் முஸ்தபா (24), மகபூப்பாளையம் மணிமுத்து (24), எஸ்.எஸ். காலனி டேவிட் குமார் (24) உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.