வங்கி ஊழியர் மாயம்

வங்கி ஊழியர் மாயம் ஆனார்.

Update: 2023-05-29 17:23 GMT

சென்னையை சேர்ந்தவர் ராஜ்மோகன். இவரது மகன் அனீஸ்ராஜ் (வயது 28). இவர் சென்னையில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று தனது பெற்றோரிடம் கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உள்ள சித்தப்பா சீனிவாசன் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு, அங்கிருந்து கரூருக்கு ரெயிலில் வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனீஸ்வரன் மகாதானபுரத்திற்கு வரவில்லையாம். இதையடுத்து சீனிவாசன் பல்வேறு இடங்களில் அனீஸ்வரனை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாயமான அனீஸ்வராஜ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்