லாரி மோதி வங்கி ஊழியர் பலி
திருக்கோவிலூர் அருகே லாரி மோதி வங்கி ஊழியர் பரிதாபமாக இறந்தார்.;
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள பகண்டை கூட்டுரோடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜன் மகன் முகிலேந்திரன்(வயது 29). பகண்டைகூட்டு ரோட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் நேற்று மாலை மோட்டார் சைக்களில் பகண்டை கூட்டு ரோட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார். மணலூர்பேட்டை அருகே உள்ள கூவனூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகில் வந்தபோது அந்தவழியாக வேகமாக வந்த லாரி முகிலேந்திரன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.