குன்னம்:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை காந்தி நகர், வல்லாய் தெருவை சேர்ந்தவர் விஜயராமன் (வயது 44). இவருக்கு பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். விஜயராமன் பெரம்பலூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஆயுள் காப்பீடு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அய்யலூர் ஜீவா நகரில் வாடகை வீட்டில் 3-வது மாடியில் தனியாக தங்கியிருந்து, பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த வீட்டில் விஜயராமன் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.