பனிமயமாதா பேராலய திருவிழா:தங்கத்தேரை வடிவமைத்தவருக்கு அமைச்சர் பாராட்டு
பனிமயமாதா பேராலய திருவிழாவில் தங்கத்தேரை வடிவமைத்தவருக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. இதனை முன்னிட்டு பேராலயத்தின் சார்பில் தங்கத்தேரை வடிவமைத்தவர்கள், அதற்கு உறுதுணையாக இருந்தவர்கள், பேராலய நிர்வாகிகள் ஆகியோருக்கான பாராட்டு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, தங்கத்தேர் வடிவமைத்தவர்களுக்கு சால்வை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் பாராட்டினார். நிகழ்ச்சியில் பங்குதந்தை குமார்ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.