புகழ்பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டம் ஏப்.1-ல் நடைபெறும்: கோயில் நிர்வாகம் அறிவிப்பு
தேரோட்ட திருவிழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று நடைபெற்றது.
திருவாரூர்,
உலக புகழ்பெற்ற திருவாரூர் கோவில் ஆழித்தேரோட்டம் உலக புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த வருடத்திற்கான ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்ட திருவிழாவிற்கு பந்தக்கால் முகூர்த்தம் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் இன்று நடைபெற்றது.
முன்னதாக பந்தக்கால் தூணிற்கு சந்தனம், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, பால் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.